தென்மும்பை மலபார்ஹில்லில் மந்திரிகளுக்கு 18 மாடி குடியிருப்பு கட்டிடம் மாநில அரசு முடிவு
தென்மும்பை மலபார்ஹில்லில் மந்திரிகளுக்கு 18 மாடியில் குடியிருப்பு கட்டிடம் கட்ட மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
மும்பை,
தென்மும்பையில் தற்போது முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு அரசு பங்களாக்கள் உள்ளன. இந்த நிலையில், மந்திரிகளுக்காக 18 அடுக்குமாடி கட்டிடத்தை கட்டுவதற்கு மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த கட்டுமான பணிக்காக மலபார்ஹில் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அந்த இடத்தில் புர்டான் என்ற 105 ஆண்டுகள் பழமையான பங்களா வீடு உள்ளது.
4 படுக்கை அறை
அந்த பங்களா தற்போது யாருமின்றி காலியாக இருக்கிறது. 2 ஆயிரத்து 584 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் அமைந்து உள்ள அந்த பங்களாவை இடித்து விட்டு, அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் 18 மந்திரிகள் தங்கும் வகையில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியிலும் ஒரு ஹால், 4 படுக்கை அறைகள், சமையலறை, அலுவலகம், பார்வையாளர்கள் அறை, 2 ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இந்த திட்டம் விரைவில் பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவானுக்கு ஒப்புதலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story