கொளத்தூரில் விவசாய கடன் அட்டை விளக்க முகாம்
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூரில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாய கடன் அட்டை விளக்க முகாம் நேற்று மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால் தலைமையில் நடந்தது.
கண்ணமங்கலம்,
ஊராட்சி தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தார். முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கி கடன் அட்டையில் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
அப்போது விவசாயிகள் சிலர் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் உரம் வாங்கினால் உரிய பில் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறினர்.
இதில் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் குமார், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story