ஜோலார்பேட்டை அருகே காசிவிஸ்வநாதர் சிலையில் சூரிய ஒளி விழும் காட்சி
ஜோலார்பேட்டையை அருகே அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்தர்கள் அருளிய காசி விஸ்வநாதர் சிலை, விநாயகர், நவக்கிரக சன்னதி ஆகிய சிலைகள் உள்ளன.
ஜோலார்பேட்டை,
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவிலில் நான்கு கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று காலை யாக பூஜை முடிந்ததும் காசிவிஸ்வநாதர் சிலை மேல் 7 மணியளவில் சூரிய ஒளி பட்டது. இந்த சூரிய ஒளி தொடர்ந்து படிப்படியாக சிலையின் நெற்றி மேல் பட்டு படிப்படியாக கீழ் நோக்கி இறங்கி மறைந்தது. இதனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழாயொட்டி பூஜைகள் நிறைவு விழாவின் போது சூரிய ஒளி சிலை மீது விழும் என்று பக்தர்கள் கூறினர். இதனை பலர் புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story