முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார்
தென்காசியில் மாவட்ட அளவில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார்.
தென்காசி,
தென்காசியில் மாவட்ட அளவில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார்.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதனை தென்காசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் விளையாட்டு வீரர்களை கைகுலுக்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் வரவேற்றார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர் ராமச்சந்திரபிரபு, பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். டென்னிஸ் பயிற்சியாளர் குமர மணிமாறன் நன்றி கூறினார்.
பல்வேறு போட்டிகள்
தென்காசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்கள், பெண்களுக்கும், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கும் தடகள போட்டி போட்டிகள் நடந்தது. குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியும், இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியும், குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பெண்களுக்கான கைப்பந்து போட்டியும், தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கான கபடி போட்டியும், குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பெண்களுக்கான கபடி போட்டியும் நடைபெற்றது.
இதேபோல் இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கும், குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பெண்களுக்கும் பேட்மிட்டன் போட்டிகள் நடந்தது. குற்றாலம் செய்யது ரெசிடென்சியல் பள்ளியில் ஆண்கள், பெண்களுக்கு டென்னிஸ், குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. பாரத் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஆண்கள், பெண்களுக்கான ஜூடோ போட்டியும், வேல்ஸ் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஆண்கள், பெண்களுக்கான ஆக்கி போட்டியும் நடந்தது. போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.
Related Tags :
Next Story