குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசம் காப்போம் பேரணியில் பங்கேற்பதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புறப்பட்டு சென்றனர். முன்னதாக மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் அம்பேத்கர் சிலை அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ரமணி, ஒன்றிய துணை செயலாளர் ஜான், இளைஞரணி துணை செயலாளர் கிள்ளிவளவன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், நிர்வாகிகள் நாகூர்கனி, மலையரசன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இஸ்லாமிய தோழமை கூட்டமைப்பு
இதேபோல மன்னார்குடி பெரியகடைத்தெரு பெரியபள்ளிவாசல் எதிரே இஸ்லாமிய தோழமை கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story