திருவள்ளூர் அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோதி 6 பேர் படுகாயம் மின் கம்பங்கள் சேதம்
திருவள்ளூர் அருகே தறிகெட்டு ஓடிய லாரி, ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், 6 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர்,
சென்னை அன்னனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 38). இவர் அங்குள்ள தனியார் கிரெடிட் கார்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவர் வேலையின் காரணமாக மோட்டார் சைக் கிளில் சத்தரை பகுதிக்கு வந்தார். அப்போது அந்த வழியாக தறிகெட்டு வந்த லாரி ஒன்று, சாலையோரம் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மேலும் வேகமாக சென்ற அந்த லாரி, அருகே இருந்த ஒரு ஷேர் ஆட்டோ மீதும் மோதியது. பின்னர், அந்த லாரி நிற்காமல் சாலையோரம் இருந்த 3 மின்கம்பம் மீது மோதி விட்டு நின்றது.
இதில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்திரசேகருக்கும், ஆட்டோவில் இருந்த சென்னை கொளத்தூரை சேர்ந்த கஸ்தூரி (58), சரோஜினி (68), வசந்தா (58), மல்லிகா (58), கோபிநாத், (27) ஆகிய 6 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் அனைவரும் திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சந்திரசேகர் மப்பேடு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story