கியாஸ் விலை உயர்வினை கண்டித்து மாணவர் காங்கிரசார் மாட்டுவண்டி-சைக்கிள் ஊர்வலம்


கியாஸ் விலை உயர்வினை கண்டித்து மாணவர் காங்கிரசார் மாட்டுவண்டி-சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 23 Feb 2020 5:37 AM IST (Updated: 23 Feb 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து மாணவர் காங்கிரசார் மாட்டுவண்டி, சைக்கிள் ஊர்வலம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, குடியுரிமை திருத்த சட்டம், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து மாணவர் காங்கிரசார் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி அவர்கள் புதுவை ராஜீவ்காந்தி சிலையருகே நேற்று கூடினார்கள். அங்கு மாட்டுவண்டி ஒன்றையும், ஜீப் ஒன்றில் கியாஸ் சிலிண்டரையும் வைத்து அதற்கு மாலை போட்டு இருந்தனர்.

சைக்கிள் ஊர்வலம்

அதன்பின் மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர். ஊர்வலத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று முடிவில் கடற்கரை காந்தி சிலை பகுதியில் நிறைவடைந்தது.

Next Story