டெல்லியில் நடந்த சந்திப்பின் போது பிரதமரிடம் பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து பேசினோம் - மந்திரி ஆதித்ய தாக்கரே பேட்டி
டெல்லியில் நடந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் பி.எம்.சி. வங்கி பிரச்சினை, ஜி.எஸ்.டி. இழப்பீடு குறித்து பேசினோம் என மந்திரி ஆதித்ய தாக்கரே கூறினார்.
மும்பை,
மராட்டிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக உத்தவ் தாக்கரே நேற்றுமுன்தினம் தனது மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரேயுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக நேற்று மந்திரி ஆதித்ய தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெல்லியில் நடந்த ஒவ்வொரு சந்திப்பும் மரியாதைக்குரியதாக இருந்தது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது மராட்டியத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு, பி.எம்.சி. வங்கி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானது. இதற்கு முன்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சோனியாகாந்தியுடன் தொலைபேசியில் தான் பேசியிருந்தார். இது அவர்களின் முதல் சந்திப்பு. இந்த சந்திப்பின் போது பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story