தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி,
தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
மருத்துவ முகாம்
தூத்துக்குடி அண்ணாநகர் தங்கம் நடுநிலைப்பள்ளியில் ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு கல்விக்குழும தலைவர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார்.
எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினர்.
அப்போது அவர் கூறியதாவது:–
முன்மாதிரி மாநிலம்
தமிழக மக்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக வாழ வேண்டும். குறிப்பாக கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் எந்த வகையிலும் சிரமப்படக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், முன்மாதிரி மாநிலமாகவும் மாற்றிக் காட்டினார் ஜெயலலிதா தான். அவர் தனது பிறந்தநாளை சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் விழாவாகவே நடத்தி வந்தார். அவரது திட்டங்களை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. அதிக அளவில் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இங்கு மருத்துவ முகாம் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து, நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், செரினா பாக்யராஜ், ராஜலட்சுமி கல்வி குழும முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story