தூத்துக்குடியில் தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் தீவிபத்து
தூத்துக்குடியில் தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பழைய பேப்பர் எரிந்து சேதம் அடைந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பழைய பேப்பர் எரிந்து சேதம் அடைந்தது.
தீவிபத்து
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தனியார் சரக்கு பெட்டக முனையம் அமைந்து உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய பேப்பர் பண்டல்கள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் மதியம் திடீரென அந்த பேப்பர் பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனடியாக சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்துக்கு பிறகு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ரூ.20 லட்சம்
இந்த தீவிபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பேப்பர் பண்டல் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story