நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2–வது தொலைநிலை கல்வி இயக்கக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2–வது தொலைநிலை கல்வி இயக்கக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2–வது தொலைநிலை கல்வி இயக்கக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கினார். பதிவாளர் சந்தோஷ் பாபு வரவேற்றார். தொலைநிலை கல்வி இயக்கக இயக்குனர் ராஜலிங்கம் விளக்க உரையாற்றினார். விழாவில் விஜிலா சத்தியானந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி,பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தடைகளை கடந்து...
இன்றைய கால சூழ்நிலையில் கல்வி என்பது இளைஞர்களுக்கு இன்றியமையாத ஒன்று. உலக தரத்தில் கல்வி கற்ற இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா 3–ம் இடத்தில் உள்ளது. மனித வளம் அதிகம் நிறைந்த நம் நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தடைகளை கடந்து முன்னேறி சாதியுங்கள். நாளை இந்தியாவை கட்டிக்காப்பது நீங்கள்தான். கடிமையான உழைப்பு உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சுமார் 350–க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர். தேர்வாணையர் சுருளியாண்டி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story