தச்சம்பட்டு அருகே, குளத்தில் மூழ்கி கூட்டுறவு வங்கி செயலாளர் சாவு


தச்சம்பட்டு அருகே, குளத்தில் மூழ்கி கூட்டுறவு வங்கி செயலாளர் சாவு
x
தினத்தந்தி 24 Feb 2020 3:45 AM IST (Updated: 23 Feb 2020 11:45 PM IST)
t-max-icont-min-icon

தச்சம்பட்டு அருகே குளத்தில் மூழ்கி கூட்டுறவு வங்கி செயலாளர் பரிதாபமாக இறந்தார்.

வாணாபுரம், 

தச்சம்பட்டு அருகே உள்ள எலிக்குத்தி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அய்யப்பன் (வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று அய்யப்பன் அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவர் குளத்தில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் தத்தளித்தார். அருகில் உள்ளவர்கள் வருவதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story