இளையான்குடியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 7-வது நாளாக போராட்டம்


இளையான்குடியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 7-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2020 3:45 AM IST (Updated: 24 Feb 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 7-வது நாளாக இளையான்குடியில் போராட்டம் நடந்தது.

இளையான்குடி,

இளையான்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒருவாரமாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அரசால் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இளையான்குடியில் தொடர்ந்து இரவு, பகலாக போராட்டம் நடந்தது. கண்டன உரை மற்றும் கண்டன முழக்கம் செய்து இளையான்குடி அனைத்து ஜமாத்துல் அமைப்பினர்் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து நேற்று 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் அமைப்பினர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். தொடர்ந்து சிறப்பு கண்டன கூட்டத்தில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் சம்சுல் இக்பால் தாவூதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டத்தலைவர் கண்ணகி, முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், தி.மு.க. மாவட்ட பேச்சாளர் அய்யாச்சாமி மற்றும் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களும் கண்டன உரையாற்றினர்.

மேலும் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ., ம.ம.க., ம.ஜ.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், சிவகங்கை அனைத்து ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டனர்.

Next Story