லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: மற்றொரு மாணவரும் சிகிச்சை பலனின்றி சாவு


லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: மற்றொரு மாணவரும் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 24 Feb 2020 4:45 AM IST (Updated: 24 Feb 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாளையம் அருகே வந்தபோது சாலையோரம் நின்ற டிரெய்லர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 17). சோழவரம் சோத்துபெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ் பாலாஜி (17). இவர்கள் இருவரும் செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

நேற்று காலை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட ‘விட்டமின் சி’ குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். எடப்பாளையம் அருகே வந்தபோது சாலையோரம் நின்ற டிரெய்லர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சுரேந்தர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தனுஷ் பாலாஜி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story