அடுத்த 10 ஆண்டுகளில் 40 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்ய இலக்கு
அடுத்த 10 ஆண்டுகளில் 40 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு துணை தலைமை இயக்குனர் கூறினார்.
திருச்சி,
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் வாழை கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உற்பத்தியாகும் சுமார் 300 வகையான வாழைத்தார்கள் இடம் பெற்று உள்ளன. கண்காட்சியின் ஒரு பகுதியாக நோய்களில் இருந்து வாழைகளை பாதுகாப்பது, வாழைசார்ந்த பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பு தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், வாழை தொழில் நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர். 400-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் இந்த கருத்தரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
கருத்தரங்கத்தில் பங்கேற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு (தோட்டக்கலைத்துறை) துணை தலைமை இயக்குனர் ஏ.கே.சிங் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
40 மில்லியன் டன் உற்பத்தி
வாழை உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் வாழையில் இந்தியாவின் பங்கு என்பது 27 சதவீத அளவில் உள்ளது. வாழை இந்தியாவின் பண்பாடு, கலாசாரத்தின் ஒரு அங்கமாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வாழை உற்பத்தி அதிகரித்து உள்ளது. நமது நாட்டில் தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அடுத்த 10 ஆண்டுகளில் 40 மில்லியன் டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அரசுக்கு பரிந்துரை
வாழை சாகுபடியில் அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்களின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருவதால் இந்த இலக்கினை நாம் நிச்சயம் எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்காக தான், வாழை விவசாயிகள் பயன் அடையும் வகையில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்த வாழைக்கு ஏற்படும் நோய்கள் தொடர்பான பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், மதிப்பு கூட்டல் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி தருதல் தொடர்பாக விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் இந்திய அரசின் வேளாண் துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.
சொட்டுநீர் பாசனம்
தமிழகத்தில் வாழைக்கு வாடல், இலைப்புள்ளி நோய்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்க விவசாயிகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொண்ட செவ்வாழை, நேந்திரன் போன்ற வகைகளை பயிரிட்டு வருகிறார்கள். தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க மராட்டியம், உத்தரபிரதேச மாநிலங்களை பின்பற்றி தமிழக விவசாயிகளும் சொட்டுநீர் பாசன முறைக்கு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். வாழை கழிவுகளில் இருந்து ஊட்டச்சத்து மறு சுழற்சி பொருட்களை தயாரிக்கவும், அதனை நோய் எதிர்ப்பு சக்தி இயற்கை மருந்தாக பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திருச்சி வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமா, முதன்மை விஞ்ஞானி செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story