சிவகாசி அருகே, பால்காரர் கொலை; தொழிலாளி கைது


சிவகாசி அருகே, பால்காரர் கொலை; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 24 Feb 2020 3:15 AM IST (Updated: 24 Feb 2020 2:42 AM IST)
t-max-icont-min-icon

தகராறின்போது பால்காரரை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தங்கல்,

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது63). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் ஒரு மாட்டு தொழுவத்திற்கு பால்கறக்க சென்றார். அப்போது அதேபகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமார் (43) தொழுவத்திற்குள் உட்கார்ந்திருந்தார். இந்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் முத்துக்குமார் தொழுவத்தில் உட்கார்ந்திருந்தது குறித்து முனியாண்டி அவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் முத்துக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் முனியாண்டியை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே முனியாண்டி துடிதுடித்து இறந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராஜா, முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து முத்துக்குமாரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து முத்துகுமாரிடம் விசாரித்து வருகிறார்.


Next Story