சேற்றில் ஓட்டப்பந்தயம் 2 முறை தவறி விழுந்த மந்திரி சி.டி.ரவி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


சேற்றில் ஓட்டப்பந்தயம் 2 முறை தவறி விழுந்த மந்திரி சி.டி.ரவி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 24 Feb 2020 4:00 AM IST (Updated: 24 Feb 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு திருவிழாவையொட்டி, சேற்றில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மந்திரி சி.டி.ரவி 2 முறை தவறி விழுந்து ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.

சிக்கமகளூரு,

சிக்கமகளூருவில் வருகிற 28, 29, 1-ந் தேதிகளில் மாநில அரசு சார்பில் சிக்கமகளூரு திருவிழா என்ற பெயரில் பண்டிகை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது.

இந்த நிலையில் சிக்கமகளூரு திருவிழாவையொட்டி, சிக்கமகளூரு உற்சவ நாத் என்ற பெயரில் சிக்கமகளூரு டவுனில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் விளையாட்டு மைதானம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, சிக்கமகளூரு அருகே உள்ள நல்லூர் ஆகிய பகுதிகளில் யோகா பயிற்சி, சூரிய நமஸ்காரம், காற்றாடி விடும் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இந்த போட்டிகளை கர்நாடக சுற்றுலா துறை மந்திரியும், சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சி.டி.ரவி ெதாடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த விளையாட்டு போட்டிகளை காண குவிந்தனர்.

இந்த நிலையில் நல்லூர் பகுதியில் நடந்த சேற்றில் ஓடும் போட்டியை தொடங்கி வைத்த மந்திரி சி.டி.ரவி அந்த போட்டியில் தானும் பங்கேற்று சேற்றில் ஓடினார். அப்போது அவர் 2 முறை சேற்றில் விழுந்து எழுந்து ஓடினார். அப்போது போட்டியை கண்டுகளித்தவர்கள் சி.டி.ரவியை உற்சாகப்படுத்தினர்.

இந்த போட்டி முடிந்ததும் சி.டி.ரவியுடன் போட்டியை காணவந்தவர்கள் உற்சாகமாக செல்பி எடுத்து கொண்டனர். பின்னர் அவர் அங்கிருந்து சென்றார். இதற்கிடையே சி.டி.ரவி சேற்றில் ஓடும் போட்டியில் கலந்து கொண்டதும், அவர் 2 முறை சேற்றில் விழுந்து எழுந்து ஓடிய காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story