சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணுக்கு மிரட்டல் கல்லூரி நண்பர் கைது
இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த கல்லூரி நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட ஒரு நபர் உங்களுடைய ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன். அப்படி விடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் எனக்கு கொடுக்க வேண்டும், மேலும் நான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆபாச வீடியோ ஒன்று வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுபற்றி கே.ஆர்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மர்ம நபர் பேசிய செல்போன் எண் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அந்த பெண்ணிடம் போலீசார் கேட்டனர். அப்போது அந்த பெண், தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர் மத்திய பிரதேசத்தில் இருப்பதாக கூறினார். இதையடுத்து அவரை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தீபக்(வயது 28) என்பதும், இளம்பெண்ணுடன் 2008-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை பெங்களூருவில் ஒரே கல்லூரியில் படித்ததும் தெரியவந்தது. இதையடுத்து தீபக், கல்லூரி படிப்பை முடித்து விட்டு மத்திய பிரதேசத்திற்கு சென்று விட்டார்.
பின்னர் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி நண்பர்கள் அனைவரும் சந்தித்து உள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணிடம், தீபக் செல்போன் எண்ணை வாங்கி உள்ளார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி முடிந்து கல்லூரி நண்பர்களுடன் அந்த பெண்ணும் தீபக் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த இளம் பெண் குளிப்பதை செல்போனில் தீபக் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீபக்கை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

Related Tags :
Next Story