சீரமைப்பு பணிகள் நடக்கின்றன எடியூரப்பா, விரைவில் காவேரி பங்களாவில் குடியேறுகிறார்
முதல்-மந்திரி எடியூரப்பா, விரைவில் காவேரி பங்களாவில் குடியேறுகிறார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி 14 மாதங்கள் நடைபெற்றது. தற்போது கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகின்றன.
முதல்-மந்திரியின் கிருஷ்ணா நிர்வாக இல்லத்தின் அருகே குமரகிருபா ரோட்டில் காவேரி அரசு பங்களா அமைந்துள்ளது. அந்த பங்களாவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த காவேரி பங்களா முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஒதுக்கப்பட்டது.
அதனால் அந்த பங்களாவை காலி செய்யும்படி பா.ஜனதா அரசு சித்தராமையாவுக்கு உத்தரவிட்டது. முதலில் காலி செய்ய மறுத்த சித்தராமையா, சமீபத்தில் அவர் வேறு வீட்டில் குடியேறினார். இந்த நிலையில் காவேரி பங்களாவில் முதல்-மந்திரி எடியூரப்பா ஜோதிடர்களின் ஆலோசனைப்படி வருகிற 28-ந் தேதி குடியேற திட்டமிட்டுள்ளார்.
அந்த பங்களாவில் வாஸ்துபடி சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதற்கான சீரமைப்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. முதல்-மந்திரி எடியூரப்பா தற்போது டாலர்ஸ் காலனியில் உள்ள தனது தவளகிரி இல்லத்தில் தங்கியுள்ளார். இந்த வீடு, விதான சவுதா மற்றும் கிருஷ்ணா இல்லத்தில் இருந்து தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story