தேசத்துரோக செயலில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
தேசத்துரோக செயலில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம் என்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
மைசூரு,
கர்நாடக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நமது உணவை சாப்பிட்டுவிட்டு நாட்டுக்கு எதிராக தேசத்துரோக செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம். அத்தகையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
கர்நாடகத்தில் பெங்களூரு தவிர்த்து மைசூரு உள்பட 2-ம் நிலை நகரங்களில் முதலீடுகளை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தின் பிற நகரங்களும் தொழில் முதலீடுகளுக்கு ஏற்றதாக உருவாகியுள்ளன. மராட்டிய மாநில தொழில் முதலீட்டாளர்கள் கர்நாடகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர்.
தாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் நாங்கள் பங்கேற்ேறாம். அங்கு 40-க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, கர்நாடகத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். வருகிற நவம்பர் 3-ந் தேதி உலக முதலீட்டாளர் மாநாடு பெங்களூருவில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
மைசூருவில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அந்த தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து உற்பத்தியை பெருக்கவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வடகர்நாடகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் கூட்டம் போல மைசூருவிலும் முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்படும். மைசூருவில் செயல்பட்டு வந்த மூலிகை தொழிற்சாலைகளும் தற்போது மூடப்பட்டு உள்ளன. அந்த தொழிற்சாலைகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகதீஷ்ஷெட்டர் கூறினார்.

Related Tags :
Next Story