அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மாசிமாத அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தர்மபுரி அபய ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது சாமிக்கு பழங்கள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் தர்மபுரி தாசஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசையையொட்டி சாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மன்றோ குளக்கரை
தொப்பூர் கணவாய் பகுதியில் அமைந்துள்ள மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சந்தனம், பன்னீர், பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் வர்ணதீர்த்தம், சோகத்தூர், உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விஸ்வரூப ஆஞ்சநேயர்
குப்புசெட்டிப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், பன்னீர், இளநீர் மற்றும் விபூதியால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு துளசி, வெற்றிலை மாலைகள் சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சஞ்சீவராயன் கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story