சேலத்தில் 411 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் கலெக்டர் ராமன் வழங்கினார்


சேலத்தில் 411 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் கலெக்டர் ராமன் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Feb 2020 4:39 AM IST (Updated: 24 Feb 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 411 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் கலெக்டர் ராமன் வழங்கினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்களில் தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள், அறுவை சிகிச்சை ஆகியவற்றை பெறுவதற்கு தகுதியானவர்களை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 804 குழந்தைகள் தேசிய அடையாள அட்டைக்கும், 411 குழந்தைகள் மாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கும், 44 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் 411 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி, கால்தாங்கி, ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் கலெக்டர் ராமன் கலந்துகொண்டு ரூ.11 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் 411 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story