ரெயில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வாலிபரை மீட்ட மோட்டார் மேன், கார்டு மத்திய ரெயில்வே பாராட்டு
ரெயில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்றிய மின்சார ரெயில் மோட்டார் மேன், கார்டை மத்திய ரெயில்வே பாராட்டி உள்ளது.
மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல் நோக்கி சென்ற மின்சார ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சுன்னாப்பட்டி- குர்லா இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது, தண்டவாள ஓரத்தில் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்தார். இதை கவனித்த மோட்டார் மேன் சூரியகாந்த் பாட்டீல் மின்சார ரெயிலைநிறுத்தினார்.
மேலும் கார்டு பப்லுகுமார் மற்றும் பயணிகள் உதவியுடன் படுகாயங்களுடன் கிடந்த வாலிபரை மின்சார ரெயிலில் ஏற்றினார். மேலும் இது குறித்து குா்லா ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இந்தநிலையில் மின்சார ரெயில் குா்லா சென்றவுடன் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் அந்த வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதால் ரெயில் விபத்தில் சிக்கிய வாலிபரை காப்பாற்ற முடிந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ரெயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபர் வினாயக் உதய் பரப்(வயது29) என்பது தெரியவந்துள்ளது. பணியில் விழிப்புடன் செயல்பட்டு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபரின் உயிரை காப்பாற்றிய மோட்டார் மேன், கார்டை மத்திய ரெயில்வே பாராட்டி உள்ளது.
மேலும் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறினார்.

Related Tags :
Next Story