கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்
x
தினத்தந்தி 24 Feb 2020 5:16 AM IST (Updated: 24 Feb 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த தனியார் சொகுசு பஸ் டிரைவர் மகேஷ்(வயது35). இவர் கடந்த டிசம்பர் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மனைவி உஜ்வாலா(28), மகேஷ் மாரடைப்பில் இறந்துவிட்டதாக டாக்டரிடம் போலி சான்றிதழ் வாங்கி கணவரின் உடலை தகனம் செய்துவிட்டார்.

இந்தநிலையில் உஜ்வாலா அவரது கள்ளக்காதலன் தாஸ்(25), நண்பர் சாகருடன்(28) சேர்ந்து கணவரை கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் தாஸ், சாகரை பிடித்து விசாரித்தனர். இதில், கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்துகட்ட உஜ்வாலா முடிவு செய்துள்ளார். இதற்காக சம்பவத்தன்று கணவருக்கு தூக்க மாத்திரையை பாலில் கலந்து கொடுத்து உள்ளார். இதையடுத்து அங்கு சென்ற தாஸ், தூக்க மாத்திரை கலந்த பாலை குடித்த மயக்கத்தில் இருந்த மகேசை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாஸ், அவருக்கு தூக்க மாத்திரை வாங்கி கொடுத்த சாகரை கைது செய்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த உஜ்வாலாவையும் போலீசார் கைது செய்து உள்ளனர். 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல மகேசின் இறப்புக்கு இயற்கை மரணம் என சான்றிதழ் அளித்த டாக்டரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story