காரைக்காலில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் மாணவிகள் மயக்கம் திடீர் பரபரப்பு
காரைக்காலில் நடந்த மாரத்தான் ஓட்டத்தின் போது மாணவிகள் திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால்,
காரைக்காலில் தனியார் அமைப்பு சார்பில், மாரத்தான் ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டு முதலில் வருபவர்களுக்கு டி சர்ட்டும் பின்னர் வருபவர்களுக்கு தொப்பியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிகாலையில் இருந்தே அதிக அளவில் மாணவர்கள் வரத்தொடங்கினர். மாவட்ட நிர்வாகத்திடம் முன்னறிவிப்பு இல்லாமலும், போதிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்படாத நிலையிலும் மாரத்தான் ஓட்டம் தொடங்கியது.
மயங்கினர்
அப்போது இதில் கலந்து கொண்டவர்களுக்கிடையே திடீரென தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதற்குள் போட்டி தொடங்கியதால் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடத்தொடங்கினர். இதில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்த தனியார் நிறுவன அதிகாரிகளும், மாணவிகள் சிலரும் தடுமாறி விழுந்தனர். சில மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினர்.
இதனால் அங்கு திடீரென பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

Related Tags :
Next Story