மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்


மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2020 3:45 AM IST (Updated: 24 Feb 2020 6:30 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நாகர்கோவில், 

மீனவர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து 28–ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட்ட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நோரில் வழங்கலாம். 

பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். இந்த கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரம் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். 

கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story