புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1½ கோடி ஒதுக்கீடு மாநகராட்சி பள்ளியில் கலாநிதி வீராசாமி எம்.பி. ஆய்வு
மணலி மண்டலம் பாடசாலை தெருவில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கலாநிதி வீராசாமி எம்.பி. ஆய்வு செய்தார்.
திருவொற்றியூர்,
மணலி மண்டலம் பாடசாலை தெருவில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 800 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. இதனால் இட நெருக்கடியில் படிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. ஏற்கனவே உள்ள வகுப்பறைகளும் பழுதடைந்து உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் கசிந்து வகுப்பறைக்குள் விழுவதால் மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட கோரிக்கை விடுத்தனர். அதையேற்று அவர், இரண்டு தளங்கள் கொண்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடம் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.50 கோடியை ஒதுக்கீடு செய்தார்.
இந்தநிலையில் ஆரம்ப பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ள இடங்களை கலாநிதி வீராசாமி எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். அப்போது 6 மாதத்திற்குள் இந்த கட்டுமான பணி முடிவடைந்து மாணவ-மாணவிகளின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அவருடன் மணலி மண்டல உதவி ஆணையர் ராஜசேகர், தலைமை ஆசிரியை மகாலட்சுமி, தி.மு.க. நிர்வாகி ஏ.வி.ஆறுமுகம் உள்பட பலர் உடன் வந்தனர்.
Related Tags :
Next Story