பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி நேற்று அ.தி.மு.க. சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்துகொண்டு, கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கீழப்பழுவூர் பழைய பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து வைத்தார். இதையடுத்து 600 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கி தொடங்கி வைத்தார். முடிவில் திருமானூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாரணவாசி, கீழப்பழுவூர், மேலப்பழுவூர் ஆகிய 3 கிராமங்களில் 1,500 ஏழை- எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் அக்பர்ஷெரிப், மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் தில்லை திருவாசகமணி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி தங்கராசு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அழகுபாண்டியன் மற்றும் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாலை அணிவித்து மரியாதை
இதேபோல் அரியலூர் மாவட்டம், திருமானூரில் அ.தி.மு.க. சார்பில் திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அ.தி.மு.க.வினர் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக பேரணியாக நடந்து வந்து எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து ஏலாக்குறிச்சி, விழுப்பணங்குறிச்சி, சுள்ளங்குடி, அண்ணிமங்கலம், அரண்மனைகுறிச்சி, மேலவண்ணம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் இலவச நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்டவைகளை வழங்கினர். இதில் மாவட்ட பிரதிநிதி தவமணி, திருமானூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் கோவி சரவணன், விழுப்பணங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையன், கூட்டுறவு சங்க தலைவர் கோவிலூர் ரமேஷ், கோமான் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், கீழக்கவட்டாங்குறிச்சி கிளை செயலாளர் மணி, சின்னபட்டக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு அன்னதானம்
இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வேப்பந்தட்டை ஒன்றிய பகுதியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணாபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பசும்பலூர் கே.ராஜேந்திரன், மாவிலிங்கை கிளை செயலாளர் எம்.முத்துசாமி, பசும்பலூர் கிளை செயலாளர் சி.எஸ்.செல்வராசு மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டி, செந்துறை
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மீன்சுருட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான ராஜாரவி தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அரசு வழக்கறிஞர் கலைமணி, கிளை செயலாளர் மதியழகன், அண்ணா தொழிற்சங்கம் மணி, கருணாநிதி, விஜயகுமார், பாண்டியன், வழக்கறிஞர் ஜெயராஜ், கலியபெருமாள் மற்றும் கவர்னர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உதயம் ரமேஷ் தலைமை தாங்கி, இரும்புலிக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story