கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கரூர் பஸ் நிலையம் அருகே கோவைரோட்டில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் பெண்ணாக அரசியலில் ஜெயலலிதா புரிந்த சாதனை உள்ளிட்டவற்றை நிர்வாகிகள் நினைவுகூர்ந்து பேசினார்கள். பின்னர் அங்கு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதில் நகர செயலாளர்கள் வி.சி.கே.ஜெயராஜ், வெங்கமேடு பாண்டியன், நகர மாணவரணி துணை தலைவர் சத்தியா நவநீதன், அங்காளம்மன் எக்ஸ்போர்ட் ஏ.பி.ராமசாமி, ஸ்ரீ டிராவல்ஸ் கே.என்.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதியிலுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், குறிப்பேடு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு அன்னதானம்
இதே போல், கரூர் பஸ் நிலையம் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அங்கு ஜெயலலிதாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காந்திகிராமத்தில் உள்ள தண்ணீர்தொட்டி பஸ் நிறுத்தம் அருகே ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கீதா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நெரூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கரூர் தொழிற்பேட்டை பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டினை மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் 5072 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், டிபன் பாக்ஸ்களும், 1072 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், ஊராட்சிக்குழு துணை தலைவருமான தானேஷ் என்கிற முத்துக்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நொய்யல்
கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் மேடை அமைத்து அவரது உருவப்படத்தை வைத்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், புன்செய் புகழூர் பேரூர் செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். பின்னர் கட்சித் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் விவேகானந்தன், புகளூர் கூட்டுறவு வங்கித்தலைவர் மணிவேல் மற்றும் பேரூர் கழக பொறுப்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் காகிதபுரம் பேரூர் கழகம் சார்பில் காகித ஆலை மெயின்கேட், குறுக்குப் பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்தை வைத்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் வக்கீல் சதாசிவம் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தனர். பின்னர் கட்சி தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதில் காகிதஆலை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளிகள் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் தலைமையில் கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை, திருக்காடுதுறை, கரைபாளையம், கோம்புப்பாளையம், கவுண்டன்புதூர் செல்வநகர், சேமங்கி, மரவாபாளையம், புன்னம்சத்திரம், வடிவேல் நகர், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப் படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் வேட்டமங்கலம் கூட்டுறவு வங்கித் தலைவரும், ஊராட்சி செயலாளருமான முனுசாமி, நொய்யல் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன் சிலர் ஜீவா, என்.புகளூர் ஊராட்சி தலைவர் மதிவாணன், வேட்டமங்கலம் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சுப்பிரமணியன், வேட்டமங்கலம் ஊராட்சி துணைத்தலைவர் சோமசுந்தரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், கட்சித்தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை ஒன்றியம்
குளித்தலை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் குளித்தலை சுங்ககேட் பகுதியில், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குளித்தலை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான விஜயவிநாயகம் தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு அவர் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். முன்னதாக ஜெயலலிதாவின் உருவப்படம் முன்பு அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல இனுங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பொய்யாமணியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் தலைமைதாங்கி கட்சி கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார். நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட மாடுவிழுந்தான் பாறையில் நங்கவரம் பேரூர் கழக செயலாளர் திருப்பதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பங்களாபுதூரில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கவுரி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நகர அ.தி.மு.க. சார்பில்...
குளித்தலை நகர அ.தி.மு.க. சார்பில் குளித்தலை காந்திசிலை அருகே ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குளித்தலை அ.தி.மு.க. நகர செயலாளர் சோமு.ரவி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. கட்சி அமைப்பு செயலாளருமான பாப்பாசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல குளித்தலை நீதிமன்றம் முன்பும், நகரின் பல்வேறு இடங்களிலும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

Related Tags :
Next Story