குஜிலியம்பாறையில் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி
குஜிலியம்பாறையில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறையை தலைமையிடமாக கொண்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் புதிய தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் தாலுகா அலுவலகத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டவில்லை. இதனால் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக தாலுகா அலுவலகம் செயல்படுகிறது.24 கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாமாறுதல், பட்டா உட்பிரிவு மாற்றம், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட தங்களின் மனுக்களை இங்கு கொடுத்து பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து தாலுகா அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் குஜிலியம்பாறை தாசில்தார் சிவசுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குஜிலியம்பாறையில் போலீஸ் நிலையத்தை ஒட்டி ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் தாலுகா அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக குஜிலியம்பாறை தாசில்தார் சிவசுப்பிரமணியன், வேடசந்தூர் தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் அதிகாரி கள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பான ஆய்வறிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசு ஒப்புதல் அளித்தபிறகு தாலுகா அலுவலகம் கட்டும் பணி தொடங்கும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story