தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு
கொடைக்கானலில் தரமற்ற சாலை அமைப்பதாக எழுந்த புகாரின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் தாலுகா மேல்மலை கிராமங்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வழியில் அப்சர்வேட்டரி உள்ளது. இங்கிருந்து கொடைக்கானல் ஏரிச்சாலை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் இதுவரை போடப்பட்ட தார்சாலை தரமானதாக இல்லை என்றும், சாலை அமைத்த நாளிலேயே பெயர்ந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் இது தொடர்பாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் சரிவர பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாலை அமைக்கும் பணியை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சாலை அமைக்கும் பணி முதற்கட்டமாக நிறைவடைந்துள்ளது. இறுதி கட்ட பணிகள் முடிவடையும்போது சாலை உறுதியாக இருக்கும் என்றார். இதற்கிடையே கொடைக்கானல் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலை தரமானதாகவும், உறுதியானதாகவும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story