தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 3 ஆண்டில் செய்துள்ளார்


தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 3 ஆண்டில் செய்துள்ளார்
x
தினத்தந்தி 25 Feb 2020 5:00 AM IST (Updated: 25 Feb 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 3 ஆண்டில் செய்துள்ளார் என்று அமைச் சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. கூறினர்.

தஞ்சாவூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தஞ்சை மணிமண்டபத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சி திறப்பு விழாவிற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

புகைப்பட கண்காட்சியை அமைச்சர் துரைக்கண்ணு திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பால்வள தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் சரவணன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

முடிவில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சுபா‌‌ஷ் நன்றி கூறினார்.

100 ஆண்டு சாதனை

பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு, வைத்தி லிங்கம் எம்.பி. ஆகியோர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியதில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. இப்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட எந்த தகுதியும் இல்லை என மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து கேட்ட தற்கு அவர் முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்து கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 3 ஆண்டிலேயே செய்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story