தேனி மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
தேனி மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை தாங்கினார்.
தேனி,
கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பாதிக்கும் போது, ஜெயலலிதா அவற்றை எப்படி தடுத்து நிறுத்தி, சட்டப்போராட்டங்கள் நடத்தி நல்ல தீர்ப்பை பெற்று தந்தார். இதேபோல் இன்றைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி செய்து வருகிறது. காவிரி டெல்டா புண்ணிய பூமியில் உணவு உற்பத்தியை கேள்விக்குறியாக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்துவிட்டது என்ற சூழலில், அதை தடுத்து நிறுத்த தஞ்சை தரணியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. எந்த வகையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த பாதிப்பை தீர்க்கும் வகையில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ரவீந்திரநாத்குமார் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story