பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்து இரு பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது யார் அவர்கள்? போலீசார் விசாரணை


பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்து   இரு பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது   யார் அவர்கள்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Feb 2020 3:27 AM IST (Updated: 25 Feb 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்து இருபெண்களின் உடல்கள் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி, 

பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு ஏரியில், கடலும் ஏரியும் கலக்கும் இடமான முகத்துவாரம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியது.

இதனைகண்ட மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கரை ஒதுங்கி அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், மீண்டும் நேற்று அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கரை ஒதுங்கி உள்ளது.

போலீசார் விசாரணை

இதனை அறிந்த மீனவர்கள் திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து இரு பெண் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story