அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு
சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பயணிகள் பயன்பாட்டுக்காக சுரங்கப்பாதை திறக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை, அண்ணா சிலை அருகே ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. அதேபோல் தேனாம்பேட்டை அருகே டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது.
இந்த பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதாக கடப்பதற்கும், சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எளிதாக வந்தடையவும் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக பெரியார் சிலை, அண்ணாசாலை வாலாஜா சாலையில் உள்ள 2 சுரங்க பாதைகளும், நவீனப்படுத்தப்பட்டு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி நடந்து வந்தது.
சுரங்கப்பாதை திறப்பு
இந்தநிலையில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று அந்த சுரங்கப்பாதை, பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதன் மூலம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதாக வந்தடையலாம். அண்ணாசாலையையும் பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லலாம்.
நவீனப்படுத்தப்பட்ட சுரங்க பாதையில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்வதுடன், வியாபாரிகள் சுரங்கப்பாதையை ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story