மாவட்ட செய்திகள்

துணை ஜனாதிபதி நாளை வருகை: புதுவையில் பாதுகாப்பு ஒத்திகை டி.ஜி.பி. தலைமையில் நடந்தது + "||" + Vice President to visit tomorrow Held at the helm

துணை ஜனாதிபதி நாளை வருகை: புதுவையில் பாதுகாப்பு ஒத்திகை டி.ஜி.பி. தலைமையில் நடந்தது

துணை ஜனாதிபதி நாளை வருகை: புதுவையில் பாதுகாப்பு ஒத்திகை டி.ஜி.பி. தலைமையில் நடந்தது
துணை ஜனாதிபதி நாளை வருவதையொட்டி புதுவையில் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை (புதன்கிழமை) வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம்புறப்பட்டு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் காலை 10 மணிக்கு வந்து இறங்குகிறார். கவர்னர் கிரண்பெடி, முதல் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கழகம் செல்கிறார்.


இதையொட்டி புதுவையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லாஸ்பேட்டையில் இருந்து பல்கலைக்கழகம் வரை போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா தலைமையில் நேற்று ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்

இதில் விமான நிலையத்தில் இருந்து 26 கார்கள் அணிவகுத்து சென்றன. கிழக்கு கடற்கரை சாலை, சிவாஜி சிலை, கோட்டக்குப்பம் வழியாக பல்கலைக்கழக வளாகத்தில் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றன. அங்கு விழா நடைபெறுவது போல ஒத்திகை நிகழ்ந்தது. அப்போது வழியெங்கும் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர். கார்கள் அணிவகுத்து சென்ற போது அந்த பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டது.

விழா முடிந்ததும் துணை ஜனாதிபதி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்பட்டு லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வரும் வரையிலான நிகழ்வுகளும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் இடம்பெற்றன. இதில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், அகன்ஷா யாதவ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், 1000-க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீவிர சோதனை

துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பல்லைக்கழகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதுவை முழுவதும் போலீசார், துணை ராணுவ படையினர் இணைந்து ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றனர். விமான நிலையம் முதல் பல்கலைக்கழக வளாகம் வரை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அவ்வப்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.
2. பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.
3. சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் பேட்டி
சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறினார்.
4. மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கு நிதின் கட்காரி வேண்டுகோள்
சாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கும் மத்திய மந்திரி நிதின்கட்காரி வேண்டுகோள் விடுத்தார்.
5. உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்: மலைக்கிராமத்திற்கு ஓட்டுப்பெட்டிகள் கழுதைகளில் கொண்டு செல்ல நடவடிக்கை
பென்னாகரம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், மலைக்கிராமங்களுக்கு அரிசி மூட்டைகளை கழுதைகள் மீது ஏற்றிச்சென்று அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.