எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாக அலுவலகத்தை மதுரையில் அமைக்க வேண்டும் மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாக அலுவலகத்தை மதுரையில் அமைக்க வேண்டும் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர்,
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்த்தனுக்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், தற்போது வரை 22 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால் தற்போதுள்ள நடைமுறையை பார்த்தால் இந்த ஆஸ்பத்திரிக்கான நிதி ஒதுக்கீடுக்கு ஜப்பான் நாட்டு கூட்டுறவு வங்கியை எதிர்பார்த்து காத்திருந்து மிகவும் தாமதப்படும் நிலை உள்ளது.
நிதி ஒதுக்கீடு காலதாமதத்தால் பிரதமர் அடிக்கல் நாட்டி ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் தொடங்கப்படாத நிலையில் மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் நிர்வாக அலுவலகத்தை மதுரையில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்பத்திரி செயல்படக்கூடிய இடத்தில் நிர்வாக அலுவலகம் இல்லாமல் டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஏன் என பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளின் நிர்வாக அலுவலகமும் அந்த ஆஸ்பத்திரி செயல்படும் இடத்திலேயே அமைந்துள்ள நிலையில் மதுரைக்கு மட்டும் மத்திய அரசு வித்தியாசமான முடிவை எடுத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை?
எனவே மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு வரவும் அதன் நிர்வாக அலுவலகத்தை மதுரையிலேயே அமைக்கவும் தங்கள் துறையினருடன் கலந்தாய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் நிர்வாக அலுவலகம் அமைந்தால்தான் இந்த ஆஸ்பத்திரி மூலம் தமிழக மக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் நவீன சிகிச்சை வசதி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தாங்கள் எனக்கு எழுதியுள்ள முந்தைய கடிதத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் சாலை வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர்-சாத்தூர் இடையே விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரி, கலெக்டர் அலுவலக வளாகம், சாத்தூர் படந்தால் சந்திப்பு ஆகிய இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று 45 பி தேசிய நெடுஞ்சாலையில் வலையங்குளம் சந்திப்பில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். சமயநல்லூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் தனக்கன்குளம் சந்திப்பில் நடைமேம்பாலமோ அல்லது சுரங்கப்பாதையோ அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
விமான போக்குவரத்து துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பன்சாலுக்கு மாணிக்கம் தாகூர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் இருந்து மதுரைக்கான விமான சேவையை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும். திருச்சியை சென்றடைந்தவுடன் அங்கிருந்து அபுதாபிக்கு அதே விமானத்தை இயக்க வேண்டும். இதன் மூலம் விமான பயணிகள் திருச்சியில் தங்கள் சுங்க சோதனையை முடிக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு இயக்கப்பட்டால் மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோன்று மதுரையில் இருந்து தோகாவுக்கும் திருச்சி வழியாக விமான சேவைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story