சிவசேனா கூட்டணியில்எந்த பிளவும் இல்லை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேச்சு


சிவசேனா கூட்டணியில்எந்த பிளவும் இல்லை   எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2020 5:23 AM IST (Updated: 25 Feb 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

ஆளும் சிவசேனா கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை, 

மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தநிலையில், நேற்று ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்மையில் நான் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது நாங்கள் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தோம்.

கூட்டணியில் பிளவு இல்லை

நாங்கள் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் காங்கிரஸ் தலைமையுடன் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்து வருகிறோம்.

இந்த கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. நமது கூட்டணியில் பிளவு என பாரதீய ஜனதா கூறுவதை நம்பக் கூடாது. விவசாயிகள் பயிர்க்கடன் வருகிற மார்ச் 31-ந் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, குடியுாிமை திருத்தச்சட்டம் ஆகியவை தொடர்பாக 3 கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story