மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை + "||" + Gold price rises

கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை

கொரோனா வைரஸ் பீதியால்  தங்கம் விலை கிடுகிடு உயர்வு  பவுன் ரூ.33,600-க்கு விற்பனை
கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.392 உயர்ந்து ரூ.33 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது.
மும்பை, 

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ‘கிடுகிடு’ வென உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக சர்வதேச சந்தையில் தோல் மற்றும் தோல் சார்ந்த முதலீடுகள் வெகுவாக பாதித்து, தங்கத்தின் மீது முதலீடுகள் குவிந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மும்பையில் கடந்த 22-ந் தேதி ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.912 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் ரூ.33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டு வரலாறு படைத்தது.

பவுன் ரூ.33,600-க்கு விற்பனை

நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 151-க்கும், பவுன் ரூ.33 ஆயிரத்து 208-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்றும் அதிரடியாக உயர்ந்தது. இதன்படி கிராமுக்கு ரூ.49 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 200-க்கும், பவுனுக்கு ரூ.392 அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 600-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வரலாறு காணாத உச்சம்: தங்கம் விலை கிடுகிடு உயர்வு ஒரு பவுன் ரூ.30,520-க்கு விற்பனை
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு பவுன் தங்கம் மீண்டும் ரூ.30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.