குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தர்ணா போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 3:15 AM IST (Updated: 25 Feb 2020 8:18 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி குடியாத்தத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

குடியாத்தம்,

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. என்.ஏ.ஹபிஸ்சுல்லா தலைமை தாங்கினார். முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் அலிமுத்தீன், வி.ஏ.பாபு, ஏ.இஸ்மாயில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முனீர்அகமது, இர்ஷாத்அலி, நவாஸ், அனிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூசுப்கான் வரவேற்றார்.

இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இஸ்லாமிய கூட்டமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் அதாவுல்லா, முபாரக், சையத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சமீல்அகமது நன்றி கூறினார்.

இந்த போராட்டத்தில் அகதிகள் கூண்டில் நின்று கொண்டு சிலர் போராட்டம் நடத்தினர்.

Next Story