மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்; 28-ந் தேதி நடக்கிறது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான திறனாய்வுத் திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.
கரூர்,
விளையாட்டுப் போட்டியில் தேர்வு பெற்றவர்களுக்கு கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணிக்கு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் வயது சான்றிதழை பள்ளித் தலைமை யாசிரியரிடமிருந்து பெற்று வருதல் வேண்டும். வயது சான்றிதழ் இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
பள்ளிகளில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டு அதன் விவரத்தினை போட்டிக்கு வரும் போது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தடகள போட்டியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
இதில், முதல் 3 இடங்களை பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கரூர் மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல் நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story