ஜெயலலிதா சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும் தென்காசியில் புகழேந்தி பேட்டி


ஜெயலலிதா சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும் தென்காசியில் புகழேந்தி பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2020 3:30 AM IST (Updated: 25 Feb 2020 9:01 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று தென்காசியில் புகழேந்தி கூறினார்.

தென்காசி, 

ஜெயலலிதா சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று தென்காசியில் புகழேந்தி கூறினார்.

பேட்டி 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த புகழேந்தி, தென்காசி இசக்கி மஹால் திருமண மண்டபத்தில் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நல்லாட்சி நடத்தி வரும் பசுமை நாயகன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பல்வேறு விழாக்களை நடத்தி வரும் இந்த நேரத்தில் தென்காசியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து பலர் அ.தி.மு.க.வில் இணையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நெல்லையில் டி.டி.வி. தினகரன் கூட்டம் போட்டுள்ளார். இதுபோன்று கூட்டத்தை நடத்தி ஜெயிலில் இருக்கும் சசிகலாவை ஏமாற்றி ரூ.800 கோடியை வாங்கிக்கொண்டார். தற்போது அந்த அமைப்பில் எஞ்சி மிஞ்சி உள்ள இளைஞர்கள் அவரை நம்ப வேண்டாம். பாஸ்போர்ட் கிடைத்தால் அவர் உடனடியாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார்.

நாட்டுடைமை ஆக்க வேண்டும் 

ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும். தனிப்பட்ட எந்த குடும்பமும் அந்த சொத்துகளை அனுபவிக்கக்கூடாது. தேர்தலில் கூட்டணி வியூகம் அமைப்போம் என்று கூறியுள்ளார். முகவரி இல்லாத கட்சி கூட அவரிடம் கூட்டணிக்கு போகமாட்டார்கள்.

ரஜினிகாந்த்துடன் கூட்டணி வைப்போம் என்று தகவல் கூறினார்கள். ரஜினிகாந்த் வீட்டில் வாசல்படியில் கூட டிடிவி தினகரனை அனுமதிக்கமாட்டார்கள்.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உடன் இருந்தார்.

Next Story