விவசாயிகளுக்கு கடன் அட்டை கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கடன் அட்டை மற்றும் கே.சி.சி. பாஸ் புத்தகத்தை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கி தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கடன் அட்டை இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளுக்கான கடன் அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் பயிர்கடன் பெறவும், இடுபொருட்கள் பெறவும், சேமிப்பு கணக்கு பரிவர்த்தனை மேற்கொள்ளவும் பயன்படுத்தலாம். இந்த கடன் அட்டை வழங்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த விவசாய அட்டையை தொடர்புடைய விவசாயிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த கடன் அட்டையுடன் விவசாயிகள் புகைப்படத்துடன் கூடிய கே.சி.சி. பாஸ் புத்தகம் வழங்கப்படுகிறது. விவசாய கடன் அட்டை மூலம் பெறப்படும் பயிர்கடனுக்கான காசுக்கடன் கணக்கு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும்.
இந்த கடன் அட்டையை பயன்படுத்தி பயிர் கடன் தொகையை தேவைப்படும் போது தேவைப்படும் அளவு பெற்றுக்கொள்ளலாம். விவசாயி பெற்ற பயிர் கடனை 12 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். விவசாய கடன் அட்டை மூலம் நகர் ஜாமீன் அடிப்படையில் ரூ.1,60,000 வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் பயிர் கடன் பெறலாம்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 54 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் பெற்றுள்ள 11,194 விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன், கூடுதல் பதிவாளர் ப.லோகநாதன், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் கலந்து்கொண்டனர்.
Related Tags :
Next Story