மாமல்லபுரத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆணழகன் போட்டி தாம்பரத்தை சேர்ந்தவர் முதல் பரிசை வென்றார்


மாமல்லபுரத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆணழகன் போட்டி தாம்பரத்தை சேர்ந்தவர் முதல் பரிசை வென்றார்
x
தினத்தந்தி 26 Feb 2020 4:00 AM IST (Updated: 26 Feb 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில், மாமல்லன் கிளாசிக்-2020 என்ற பெயரில் ஆணழகன் போட்டி தனியார் உடற்பயிற்சி கூட மேலாளர் ஆர்.வினோத்குமார் தலைமையில் மாமல்லபுரத்தில் நடந்தது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்ட உடற்பயிற்சி கூடங்களை சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர். உடல் எடை அடிப்படையில் ஏழு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற 21 பேருக்கு ஆணழகனாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த 21 பேரில் முதல் இடத்தை பிடித்து ஆணழகனாக தேர்வு செய்யப்பட்ட தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக்(வயது24) என்பவருக்கு ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பரிசும், பதக்கமும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வெ.விசுவநாதன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஏ.கணேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.ஏ.எஸ்வந்தராவ், நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஆர்.கேசவன், எஸ்.ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பங்கேற்ற உடற்பயிற்சி கூட மாணவர்களும், வாலிபர்களும் வழுவழுப்பாக தங்கள் உடலில் எண்ணை தடவி தங்கள் உடல் கட்டமைப்பு மூலம் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியை சுற்றுலா வந்த பயணிகள் பலரும் கண்டு ரசித்தனர்.

Next Story