விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு
விளைச்சல்-வரத்து அதிகரித்ததின் விளைவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்துள்ளது. பழங்களின் விலையும் சரிந்துள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தினமும் 350 முதல் 400 லோடுகள் வரை காய்கறி விற்பனைக்காக வருகின்றன.
இந்தநிலையில் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்ததின் எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் குறைந்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறியதாவது:-
காய்கறி விலை குறைவு
விளைச்சல்-வரத்து அதிகரித்ததின் விளைவாக காய்கறி விலை குறைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த வாரம் ரூ.50 வரை விற்பனையான ஒரு கிலோ அவரை தற்போது ரூ.20-க்கு விற்பனை ஆகிறது. பீன்ஸ் விலை ரூ.20-ம், கேரட், பச்சை மிளகாய் விலை தலா ரூ.15-ம் குறைந்திருக்கிறது. பல்லாரி வெங்காயம், வெண்டை உள்ளிட்ட காய்கறி விலை தலா ரூ.10 குறைந்திருக்கிறது. பெரும்பாலான காய்கறி விலை ரூ.5 குறைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-
விலை நிலவரம்
பல்லாரி- ரூ.30 (ரூ.40), உருளைக்கிழங்கு-ரூ.25 முதல் ரூ.30 வரை (மாற்றம் இல்லை), கேரட்-ரூ.35 (ரூ.50 வரை), பீன்ஸ்- ரூ.30 (ரூ.50), நூக்கல்-ரூ.20 (ரூ.30), சவ்சவ்- ரூ.15 முதல் ரூ.20 வரை (ரூ.30), பீட்ரூட்- ரூ.20 முதல் ரூ.25 வரை (ரூ.30), முட்டைக்கோஸ் ரூ.12 முதல் ரூ.15 வரை (ரூ.20), பச்சை மிளகாய்-ரூ.15 (ரூ.30), குடை மிளகாய்- ரூ.30 முதல் ரூ.35 வரை (மாற்றம் இல்லை), இஞ்சி-ரூ.70 (மாற்றம் இல்லை), சேனைக்கிழங்கு-ரூ.25 முதல் ரூ.30 வரை (மாற்றம் இல்லை), சேப்பங்கிழங்கு-ரூ.25 முதல் ரூ.30 வரை (மாற்றம் இல்லை), கத்திரிக்காய்- ரூ.30 முதல் ரூ.35 வரை (மாற்றம் இல்லை), வெண்டைக்காய்- ரூ.30 (ரூ.40), அவரைக்காய்-ரூ.20 (ரூ.50), கோவைக்காய்- ரூ.25 (ரூ.30), கொத்தவரங்காய்- ரூ.25 முதல் ரூ.30 வரை (மாற்றம் இல்லை), பாகற்காய்(பன்னீர்)- ரூ.30 முதல் ரூ.35 வரை (மாற்றம் இல்லை), பெரிய பாகற்காய் - ரூ.30 முதல் ரூ.35 வரை (மாற்றம் இல்லை), முருங்கைக்காய்- ரூ.120 (மாற்றம் இல்லை), முள்ளங்கி-ரூ.15 முதல் ரூ.20 வரை (மாற்றம் இல்லை), வெள்ளரிக்காய்- ரூ.20 (ரூ.25), புடலங்காய்- ரூ.25 (ரூ.30), தக்காளி-ரூ.18 முதல் ரூ.20 வரை (மாற்றம் இல்லை), காலிபிளவர்(ஒன்று)- ரூ.30 (மாற்றம் இல்லை), பீர்க்கங்காய்- ரூ.35 (ரூ.40), சுரைக்காய்- ரூ.20 முதல் ரூ.25 வரை (மாற்றம் இல்லை), சாம்பார் வெங்காயம்- ரூ.40 முதல் ரூ.50 வரை (ரூ.45 முதல் ரூ.55 வரை), தேங்காய்-ரூ.30 (மாற்றம் இல்லை), வாழைக்காய் (ஒன்று) - ரூ.8 (மாற்றம் இல்லை), கீரை(கட்டு)- ரூ.10 (மாற்றம் இல்லை)
(குறிப்பு:- அடைப்புக்குறிக்குள் கடந்த வார விலை)
பழங்கள் விலை குறைவு
பழங்கள் விலை நிலவரம் குறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
காய்கறிகள் போலவே பழங்களின் வரத்தும் அதிகரித்து இருக்கிறது. அதிகப்படியான வரத்தால் சில பழங்களின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த வாரம் (கிலோவில்) ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையான கமலா ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி தற்போது தலா ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை ஆகிறது. அன்னாசி பழம் விலை ரூ.10 குறைந்து, ரூ.40 முதல் ரூ.50 வரை தற்போது விற்பனை ஆகிறது. இதர பழங்களின் விலையும் லேசாக குறைந்திருக்கிறது.
தற்போது திராட்சை (சீட்லெஸ்) மற்றும் பலாப்பழ சீசன் நடந்து வருகிறது. தர்பூசணி சீசன் தொடங்கிவிட்டது. அடுத்த மாதம் மாம்பழம் சீசன் தொடங்க இருக்கிறது. கோடைக்காலத்தை முன்னிட்டு பழங்களின் விலை உயரவே வாய்ப்பு உள்ளது.
பழங்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)
பலாப்பழம்
வாஷிங்டன் ஆப்பிள்-ரூ.170 முதல் ரூ.180 வரை, ஷிம்லா ஆப்பிள்- ரூ.130 முதல் ரூ.150 வரை, காஷ்மீர் ஆப்பிள் (டெலிசியஸ்)-ரூ.120 முதல் ரூ.150 வரை, மாதுளை- ரூ.100 முதல் ரூ.120 வரை, பலாப்பழம் - ரூ.40, சாத்துக்குடி- ரூ.35 முதல் ரூ.45 வரை, கமலா ஆரஞ்சு - ரூ.35 முதல் ரூ.45 வரை, கருப்பு திராட்சை- ரூ.70, பன்னீர் திராட்சை-ரூ.80, திராட்சை (சீட்லெஸ்)- ரூ.100, சப்போட்டா- ரூ.40, கொய்யா- ரூ.40, இலந்தைபழம்- ரூ.10, தர்பீஸ்- ரூ.15 முதல் ரூ.20 வரை, அன்னாசிபழம்- ரூ.40 முதல் ரூ.50 வரை, வாழை (தார்)- ரூ.250 முதல் ரூ.400 வரை.
Related Tags :
Next Story