திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல் ; 8 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதலில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பந்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பசுபதி (வயது 25). நேற்று முன்தினம் பசுபதி தனது நண்பர்களான ஞானமணி, கோகுல், அரவிந்த் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன், ராம்குமார், ராஜேஷ், சுகுமார் ஆகிய 4 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு பசுபதியையும், அவரது நண்பர்களையும் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர்.
8 பேர் மீது வழக்கு
பதிலுக்கு பசுபதி தனது நண்பர்களான ஞானமணி, கோகுல், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து ஜனார்த்தனன், ராம்குமார், ராஜேஷ், சுகுமார் ஆகியோரை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story