கடலூரில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்


கடலூரில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 Feb 2020 3:45 AM IST (Updated: 26 Feb 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

ஜனவரி மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும்.

பி.எஸ்.என்.எல். 4 ஜி சேவையை உடனே தொடங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலூர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குழந்தைநாதன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாநில சங்க ஆலோசகர் வெங்கடேசன், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஆனந்த், இளங்கோவன், ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பி.எஸ்.என்.எல். கடன் பத்திரங்களை வெளியிட உத்தரவாதத்தை உடனனே வழங்க வேண்டும். தன் விருப்ப ஓய்வு அமலாக்கப்பட்டதன் காரணமாக ஊழியர்களை தன்னிச்சையாக மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பேசினர்.

இ்தில் ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த அகஸ்டியன், செல்வம், சங்கர், ஸ்ரீதர், பழனி, விஜய் ஆனந்த், ரவிச்சந்திரன், சிவசங்கர், வரதராஜன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story