குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வ.உ.சி. மைதானத்தில் போலீசார் குவிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வ.உ.சி. மைதானத்தில் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 4:00 AM IST (Updated: 26 Feb 2020 5:11 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

நெல்லை, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியதால் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 23–ந் தேதி வடகிழக்கு டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், டெல்லி கலவரத்தை கண்டித்தும் மாணவர் அமைப்பு சார்பில் நேற்று பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியது. இந்த தகவல் வாட்ஸ்–அப்பிலும் வைரலாக பரவியது.

போலீஸ் குவிப்பு 

இதையடுத்து பாளையங்கோட்டை வ.உசி. மைதானத்தில் நேற்று காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மைதான நுழைவு வாயிலில் போலீசார் அணிவகுத்து நின்றனர். மைதானத்துக்கு வந்தவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் கூட்டமாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. சில மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story