புதுக்கோட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
புதுக்கோட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
அரசு வேலை
புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளியை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 37). இவருடைய உறவினருக்கு கோரம்பள்ளம் பி.எஸ்.பி.நகரை சேர்ந்த கோயில்ராஜ் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினாராம். இதனை நம்பிய ஜெயராமன் ரூ.7 லட்சம் பணம் கொடுத்து உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கோயில்ராஜ் எந்தவித அரசு வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. அதேநேரத்தில் பலமுறை ஜெயராமன் கேட்டும் கோயில்ராஜ் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லையாம்.
வழக்கு
இது தொடர்பாக ஜெயராமன், கோயில்ராஜை சந்தித்து கேட்ட போது, அவருக்கு மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, கோயில்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story