தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
வாக்குச்சாவடி பட்டியல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக வாக்குச்சாவடி பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.
கருத்துக்கள்
அந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை பொதுமக்கள் பார்வையிட்டு ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.
மேலும் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் கலெக்டரால் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story